Saturday, August 3, 2013

என் நண்பர்கள்

                 நண்பர்கள் தினத்தன்று கண்டிப்பாக நண்பர்களுக்காக பதிவொன்றை போட்டு விடவேண்டுமென்று நினைத்தேன் (நண்பர்கள் மட்டுமே பதிவை பார்வையிடுகிறார்கள் என்பது வேறு விஷயம்). நண்பர்கள் தினம்னா நண்பர்களை பற்றி சொல்லியே ஆகவேண்டும் நமக்கு நண்பர்கள் எல்லோரும் கூடவே இருக்காங்க இப்போ உங்கள பத்தி எதாவது எழுதுனா அது முகஸ்துதி மாதிரி ஆகிடும் ஆனாலும் இங்க நான் ஏதாவது  சொல்லியே ஆகணும்.

           நமக்கு பால்ய நண்பர்கள் ஒன்றிரண்டு பேரை தவிர யாரும் தொடர்பில் இல்லை,பள்ளி நண்பர்கள் எபோதாவது நல விசாரிப்புகள் மட்டுமே,கல்லூரி நண்பர்களில் சிலரை தவிர மற்றவர்களும்  அப்படியே,கல்லூரிக்கு பிறகு எனக்கு நட்பு வட்டம் அமைந்தது அருண்குமாரால் மட்டுமே அருண் யாருன்னு பதிவை படிபவர்களுக்கு நான் சொல்லி தான் தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்லை, இப்போது என்னுடைய சென்னை வாழ்க்கை இவர்களால் மட்டுமே ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

         "என்னை வாழ வைத்து கொண்டிருக்கும் என் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்".

   இதை தவிர வேற எதுவும் என்னால பெருசா சொல்லிட முடியுமானு  தெரியல....


பி.கு:என்னுடைய பதிவை படித்து என்னை வாழ்த்திய மற்றும் வசைபாடிய நண்பர்கள் அனைவருக்கும்  என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

                                                                                                    இப்படிக்கு 
                                                                                                 வெட்டி ஆபிசர்.