Sunday, July 28, 2013


                          கன்னிப்பதிவு 

                    வலைபதிவ ஏதோ குருட்டுத்தனமா ஆரம்பிச்சாச்சு என்ன எழுதலாம்னு பாத்தா எதுவும் கிடைக்கல,ஆரம்பிச்சிட்டோம் எதையாவது எழுதுவோம் அப்படினு எழுத ஆரம்பிச்ச அப்புறம் தான் தெரியுது நமக்கு தமிழே தகராறுனு இவ்ளோ நாளா நமக்கு தமிழ் கொஞ்சம் நல்லா வரும்னு நெனச்சிட்டு இருந்ததுல பெரிய இடியே விழுந்திடுச்சு சரி ஏதோ நமக்கு தெரிஞ்ச தமிழ்ல எழுதுவோம் அப்படினு  மனச தேத்திகிட்டேன்.

     நம்மளோட வலைபதிவ பாத்துட்டு நண்பர்கள் சொன்னாங்க டேய் இது புலி வால புடிச்ச மாதிரி பிடிக்காதவங்கள திட்ட தோணும் அப்படினு, சரி நமக்கு ஏன் வம்பு நம்மளோட கதையே இங்க  சிரிப்பா சிரிக்குது நாம ஏன் மத்தவங்கள திட்டனும்னு நெனச்சிட்டு நம்மள பத்தியே கொஞ்சம் எழுதுவோம்னு முடிவு பண்ணிட்டேன்.ஆமாம் இவரு என்ன பெரிசா பண்ணிட்டாரு இவர பத்தி எழுத ஆரம்பிச்சிட்டார் அப்படினு நினைக்றவங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் நான் எதுவுமே செய்யாம இருப்பதால்தான்  இந்த வலைபதிவ ஆரம்பிச்சேன் அதுனால யாரும் என்ன திட்ட வேண்டாம்னு கேட்டுக்குறேன். இதுல  என்னடா விஷயமே இல்ல அப்படின்னு நினைக்க வேண்டாம் என்னோட அடுத்த பதிவோட தலைப்ப மட்டும் இப்போ சொல்லிடுறேன் மற்றவற்றை பதிவில் சொல்கிறேன்.


        "வெட்டி ஆபிசரின் வேலை  தேடும் படலம்" 
                                                 

                                                          இப்படிக்கு
                                                     வெட்டி ஆபிசர்.

Friday, July 26, 2013

ஜாலியா  ஒரு வலைபதிவு.


                          நண்பர்களே  எனக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் உங்க எல்லோருடனும் ஜாலியா  டைம் பாஸ் பண்ணலாம்னு இருக்கேன் அதனால எனக்கு தெரிஞ்ச எல்லா வெப்சைட் ல இருந்தும் மொக்க செய்தி,நல்ல செய்தி,விமர்சனங்கள் எல்லவற்றையும் இந்த வலைபதிவுல கொட்ட போறேன் அதனால உங்களுடைய மேலான ஆதரவை எனக்கு அளித்து என்னுடைய  வலைபதிவ நான் செய்தி போட்டாலும் போடலைனாலும் தினமும் வந்து பார்க்குமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

                                                  இப்படிக்கு
                                               வெட்டி ஆபிசர்.